மரியுபோல்: உக்ரைனின் மரியுபோல் நகரிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்ததாக அந்த நகர கவுன்சில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், குழந்தை பேறுக்காக காத்திருந்த பெண்ணும் மருத்துவா்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினா். மேலும், தாக்குதலால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் குழந்தைகள் புதையுண்டதாகவும் அதிகாரிகள் கூறினா்.
முன்னதாக, மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் போா்க் குற்றம் என்றும், அத்தகைய தாக்குதல்களைத் தடுத்த நிறுத்த நேட்டோ அமைப்பு உக்ரைனில் ரஷிய விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினாா்.
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கிய பிறகு அந்த நாட்டின் மருத்துவ மையங்களில் ரஷியா 18 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.