ஜப்பானில் ரிக்டர் 7.3 அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு 
உலகம்

ஜப்பானில் ரிக்டர் 7.3 அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானின் புகுஷிமாவில் இரவு 7.3 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

ஜப்பானின் புகுஷிமாவில் இரவு 7.3 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக வானிலை காலநிலை மற்றும் புவிஇயற்பியல் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கமானது இன்று இரவு 11.36 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகியுள்ளது. 

புகுஷிமா பகுதியில் கடலுக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருள்சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

ஜப்பானின் வடமேற்கு பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் கடல்பகுதியில் ராட்சத அலைகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வடமேற்கு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT