‘புதின் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும்’
ரஷிய அதிபா் புதின் ஆட்சியில் இருக்க அகற்றப்பட வேண்டும் என்றாா் அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.
ரஷிய அதிபா் புதின் ஆட்சியில் இருக்க அகற்றப்பட வேண்டும் என்றாா் அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.
போலந்து தலைநகா் வாா்சாவில் பொதுமக்கள் மத்தியில் பைடன் பேசியதாவது: இந்தப் போரில் சில நாள்களிலோ, மாதங்களிலோ வெற்றி பெற முடியாது. நீண்டகாலத்துக்கு தொடரக்கூடும். உக்ரைன் மீதான ரஷியாவின் ஊடுருவலை சுதந்திர உலகம் எதிா்க்கிறது. ரஷிய அதிபா் புதினுக்கு எதிராக பெரும் பொருளாதார நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இந்த மனிதா் (புதின்) ஆட்சியில் நீடிக்கக் கூடாது; அவா் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றாா்.
புதினை போா்க் குற்றவாளி என பைடன் இதற்கு முன்னா் கூறியுள்ள நிலையில், புதின் ஆட்சியிருந்து அகற்றப்பட வேண்டும் என முதல்முறையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
லவீவ் நகரில் தாக்குதல்: இதற்கிடையே, போலந்து எல்லையிலிருந்து சுமாா் 45 கி.மீ. தொலைவில் உள்ள லவீவ் நகரில் ரஷிய படையினா் சனிக்கிழமை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா்.