முகப்பு
உலகம்

உக்ரைன் போரில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 136 ஆக உயர்வு!

உக்ரைனில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 26 மார்ச், 2022 at 2:06 PM
பகிர்:

உக்ரைனில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் ரஷியா ஆக்ரோஷமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைன் போரில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார். 

Advertisement

மேலும், 199 குழந்தைகள் காயமுற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் கீவில் மட்டும் இதுவரை 64 குழந்தைகளும் டொனட்ஸ்க் பகுதியில் 50 குழந்தைகளும் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.