FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

30.4.1976: நாளைமுதல் தென் ரயில்வேயில் 91 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்!

நாளைமுதல் தென் ரயில்வேயில் 91 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்...

30.4.1976 - Dinamani
பகிர்:

சென்னை, ஏப். 29- மே 1 லிருந்து அமலுக்கு வரும் புதிய கால அட்டவணையின்படி தென் ரயில்வேயில் 91 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படவிருக்கிறது. அதாவது 5 நிமிடத்திலிருந்து 110 நிமிடம் வரை ரயில்கள் ஓடும் நேரம் குறையும்.

அவற்றில் 29 எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்கள், பம்பாய் - எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓடும் நேரம் 110 நிமிடங்கள் குறைக்கப்படும். சென்னை - புது டில்லி ஜி.டி. 14.10 நிமிடமும், சென்னை - கொச்சி கேரளா எக்ஸ்பிரஸ் 40 நிமிடமும், கொல்லம் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 55 நிமிடமும் ஓடும் நேரம் குறைக்கப்படும்.

மீட்டர்காஜ் ரயில்களிடையே பெங்களூர் - மிராஜ் எக்ஸ்பிரஸின் ஓடும் நேரம் 30 நிமிடமும், ரேணிகுண்டா - செகந்தராபாத் வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸின் ஓடும் நேரம் 20 நிமிடமும், கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் ஓடும் நேரம் 10 நிமிடமும் குறைக்கப்படும்.

Advertisement

Advertisement

ஜெனரல் மானேஜர் எஸ்.எம். கௌரிசங்கர் நிருபர்களிடையே பேசுகையில், சென்னை - ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் டீஸல் ரயிலாக்கப்படும் என்றும், அதன் வேகம் 220 நிமிடம் அதிகரிக்கப்படும் என்றும், இதில் 882 இரண்டாவது வகுப்பு ஸ்லீப்பர்களும், சீட்களும் 24 முதல் வகுப்பு பெர்த்துகளும் கொண்ட கூடுதல் இடவசதிக்கு இதில் வகைசெய்யப்படும் என்றும் தெரிவித்தார். கோடைக் காலத்துக்கு இது டீஸல் ரயிலாக இருக்கும் என்றும், பின்னர் நீடிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ...

விசாரணைக்கு ஆஜராகுமாறு மாதவன் உட்பட 7 மாஜி மந்திரிகளுக்கு சர்க்காரியா கமிஷன் நோட்டீஸ்

சென்னை, ஏப். 29 - ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான சர்க்காரியா விசாரணைக் கமிஷனின் விசாரணைக்கு முன்னாள் தொழில்உணவு அமைச்சர் எஸ். மாதவனும் ஆட்படுகிறார். புது டெல்லியில் மே மாதம் 14ந் தேதியன்று நடைபெறவிருக்கும் முதல் கூட்டத்திற்கு ஆஜராகும்படி மாதவனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கருணாநிதியைச் சேர்த்து ஏழு முன்னாள் அமைச்சர்கள் சர்க்காரியா விசாரணைக் கமிஷன் விசாரணையை எதிர்நோக்குகிறார்கள்.

முன்னாள் கருணாநிதி மற்றும் சில முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் மீது கூறப்பட்ட ஊழல் புகார் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இம்மாதம் 19ந் தேதி யன்று விசாரணைக் கமிஷன் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாஜி மந்திரிகள் சாதிக் பாட்சா, ஒ.பி. ராமன், அன்பில் தர்மலிங்கம், ப. உ. சண்முகம், எஸ். பி. ஆதித்தனார் ஆகிய ஆறு அமைச்சர்கள் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு, மே 14ந் தேதி அன்று புது டெல்லியில் விசாரணைக் கமிஷனின் முதல் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது இது பற்றி மேலும் விசாரித்ததில் முன்னாள் தொழில், உணவு அமைச்சர் எஸ். மாதவனும் சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு ஆட்பட்டிருப்பது தெரிய வந்தது. முதலில் இவருடைய பெயர் தவறுதலாக விடப்பட்டதாக அறியப்படுகிறது. விசாரணைக்கு ஆளாகியுள்ள கருணாநிதி, மாதவன், ப.உ. சண்முகம், சாதிக் பாட்சா, ஆதித்தனார், ஓ.பி. ராமன், அன்பில் தர்மலிங்கம் ஆகியவர்களுக்கு தனித்தனியாக விசாரணைக் கமிஷனிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ...

summary

April 30, 1976: Starting tomorrow, the speed of 91 trains on Southern Railway will be increased!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments