உலகம்

உக்ரைன்: ரஷியப் படை தாக்குதலில் மரியுபோல் நகரில் 5,000 பேர் பலி

DIN

ரஷியப் படைகளின் தாக்குதலால் உக்ரைனின் மரியுபோல் நகரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5,000 பேர் பலியாகியுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக, தலைநகர் கீவைக் கைப்பற்ற ரஷியா தொடந்து முயற்சி செய்து வருவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோலில் கடந்த சில நாள்களாக ரஷியப் படையினர் அங்குள்ள பள்ளிகள், மருத்துவமனை மற்றும் பொதுக் கட்டடங்களின் மீது தீவிரத் தாக்குதலை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில்,  ரஷியாவின் தாக்குதலால் மரியுபோலில் 210 குழந்தைகள் உள்பட 5,000 பேர் பலியானதாக அந்நகர மேயரின் செய்தித் தொடர்பாளர் பொய்சென்கொ தெரிவித்துள்ளார்.

மேலும், போரால் அந்நகரைவிட்டு 1.40 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாகவும் 1.60 லட்சம் பேர் நகரில் சிக்கிக் கொண்டிருப்பாதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT