முகப்பு
உலகம்

உலகளவில் 1,100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

உலகம் முழுவதும் 1,100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Updated On : 31 மார்ச், 2022 at 11:57 AM
பகிர்:

உலகம் முழுவதும் 1,100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க இதுவரை  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 46.28 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

பாதிப்பு குறைவதும் அதிகரிப்பதுமாக இருப்பதால் சிறார்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் , இதுவரை உலகம்  முழுவதும் 1,100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாவும் அதில் 455 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்போது உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 8.05 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 9.79 லட்சம் பேர்  பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 4.3 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 5.2 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகினர்.

மேலும், உலகம் முழுவதும் 58 சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.