உலகம்

உலகளவில் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியாக அதிகரிப்பு!

DIN


உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பில் மீண்டவர்களின் எண்ணிக்கை 42  கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 61.6 லட்சமாக அதிகரித்துள்ளது. எனினும், கடந்த வாரம் மட்டும் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில்,  உலகம் முழுவதும் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை அளித்துள்ளது. மேற்கு பசிபிக் பிராந்தியம் உள்பட அனைத்து பிராந்தியங்களிலும் இந்தப் போக்கு பரவலாகக் காணப்படுகிறது.

சில நாள்களாக மீண்டு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், கடந்த 24 மணி நேரத்தில் 4,12,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 48,70,92,477 -ஆக அதிகரித்துள்ளது. அதே காலயளவில் 612 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61,62,358 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 55,909 போ் குணமடைந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 42,20,85,072 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 5,88,45,047 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 58,386 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 81,740,722 -ஆகவும் பலி எண்ணிக்‍கை 10,06,445 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,30,24,302 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,21,159 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,99,16,334 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,59,570   பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT