உலகம்

இலங்கைக்கு மருந்துப் பொருள்கள் இறக்குமதி: உதவுவதாக உலக வங்கி உறுதி

DIN

கடனில் மூழ்கித் தவிக்கும் இலங்கைக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருள்களை வாங்கத் தேவையான உதவிகளைச் செய்வதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது.

மருந்துப் பொருள்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குமுறைத் துறை அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமனவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய மனிதவள மேம்பாட்டுக்கான மண்டல இயக்குநர் லயன் டி. ஷெர்பர்ன்-பென்ஸை அண்மையில்  சந்தித்து உரையாடியபோது, தொடர்ந்து இலங்கைக்கு மருந்துப் பொருள்களைக் கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வேண்டுகோளை அமைச்சர் சன்னா ஜெயசுமன முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, இதுதொடர்பான நடவடிக்கைகளில்  உயர்  முன்னுரிமையளித்துச் செயல்படுவதாக பென்ஸ் உறுதியளித்தார். இதற்காக அமைச்சர் சன்னா நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT