உலகம்

ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இல்லை: தென் கொரியா ஆய்வில் அதிர்ச்சி

DIN

தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்வாக இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

தென் கொரியாவின் சுகாதார அமைச்சகமும், தேசிய குழந்தைகள் உரிமைகள் மையமும் இணைந்து கடந்தாண்டு ஜூலை 16 முதல் அக்டோபர் 29 வரை 1,270(4 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்) குழந்தைகளிடம் கருத்துக்கேட்பு நடத்தியுள்ளனர்.

அவர்கள் கருத்துக் கேட்டதில், 81.4 சதவீத குழந்தைகள் மகிழ்ச்சியாக அல்லது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 18.6 சதவீத குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்கள்.

மகிழ்வாக இல்லாதவர்களில், 33.9 சதவீதம் பேர் கல்வி சார்ந்த மன அழுத்தத்தை காரணமாக தெரிவித்துள்ளார்கள். 27.5 சதவீதம் பேர் வருங்காலத்தை எண்ணி வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். பிறர், குடும்ப சூழல், பொருளாதார நெருக்கடி, வெளித் தோற்றம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களை கூறியிருக்கின்றனர்.

மேலும், இந்த ஆய்வின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க தென் கொரியா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT