உலகம்

காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுங்கள்: இலங்கை காவல் துறை

DIN

இலங்கை காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால், பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்கள் வெளியேற காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது

கொழும்புவில் போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினருடன் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைதியை நிலைநாட்டும் வகையில் போராட்டக்காரர்கள் காலிமுகத் திடலில் இருந்து வெளியேற காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை பொதுமக்களும் போராட்டக்காரர்களும் தாக்கி வருவதால், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுகிறது. கொழும்புவில் பிரதமர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்து, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT