உலகம்

‘இதை செய்யாவிட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது’: எச்சரிக்கும் இலங்கை மத்திய வங்கித் தலைவர்

DIN

இலங்கையில் இன்னும் இரண்டு தினங்களில் திடமான அரசு அமையாவிட்டால் நாடு மேலும் மோசமான பொருளாதார சிக்கலுக்கு செல்லும் என அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சிக்கல் காரணமாக உணவு உள்ளிட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தடைபட்டுள்ளன. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பிரதமரின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால் இலங்கையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் இன்னும் 2 தினங்களுக்கும் ஸ்திரத்தன்மையுடன் அரசு அமையாவிட்டால் நாடு இன்னும் மோசமான பொருளாதார சிக்கலை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைவர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் தோல்வியை சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர், பிரதமரின் பதவி விலகல் தற்போது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு வேகமாக சரிவை சந்தித்து வருவதாகத் தெரிவித்த அவர் விரைவாக அரசு அமையாவிட்டால் இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் ஸ்திரத் தன்மையுடன் அரசை அமைக்காவிட்டால் தானும் பதவி விலக முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1948ஆம் ஆண்டிற்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருவதால் நாளுக்கு நாள் இலங்கை நெருக்கடியை சந்தித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT