உலகம்

2 நாடுகளைத் தவிர உலகம் முழுவதும் குறையும் கரோனா: உலக சுகாதார அமைப்பு

DIN


ஜெனீவா: அமெரிக்கா, ஆப்ரிக்காவைத் தவிர உலகம் முழுவதும் புதிதாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, வாராந்திர கரோனா புள்ளிவிவரத்தை புதன்கிழமை வெளியிட்டது. 

அதில், உலகம் முழுவதும் புதிதாக 35 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 25 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் முறையே 12% மற்றும் 25% குறைவாகும்.

பெரிய அளவில் பரிசோதனை, விழிப்புணர்வு காரணமாக, உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு குறையும் போக்கு கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கியது.  ஆனால், இரண்டு பகுதிகளில் மட்டுமே குறையும் போக்கு இல்லை. அமெரிக்காவில் 14 சதவீதமும், ஆப்ரிக்காவில் 12 சதவீதமும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளில் கரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்து நிலைமை சீரடைந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT