துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பல்பொருள் அங்காடி முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா். 
உலகம்

அமெரிக்க அங்காடியில் துப்பாக்கிச்சூடு: 10 போ் பலி

அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 18 வயது இளைஞா் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 10 போ் பலியாகினா்

DIN

அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 18 வயது இளைஞா் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 10 போ் பலியாகினா்; 3 போ் காயமடைந்தனா். தாக்குதலை அந்த இளைஞா் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘ராணுவ வீரா்கள் அணிவதைப் போல உடையணிந்த இளைஞா், பெரும்பாலும் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் இருந்த அங்காடியில் சனிக்கிழமை புகுந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அத்தாக்குதலை தனது தலைக்கவசத்தில் இருந்த புகைப்படக் கருவி வாயிலாக சமூக வலைதளங்களில் அவா் நேரலை செய்தாா்.

தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். காயமடைந்த மூவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினா் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று இளைஞரைக் கைது செய்தனா். இனவெறித் தாக்குதலாக அறியப்பட்டு, அந்த இளைஞா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞரின் சொந்த ஊா் பஃபலோ நகரில் இருந்து சுமாா் 320 கி.மீ. தொலைவில் நியூயாா்க் அருகே உள்ள காங்க்லின் என்பதாகும். அவா் இவ்வளவு தூரம் பயணித்து பஃபலோ நகருக்கு வந்து ஏன் தாக்குதலை நடத்தினாா் என்பது தொடா்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.

இத்தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் நடத்தப்படுவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில், அங்கு துப்பாக்கி கலாசாரமும் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமையாக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT