இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 450ஆகவும், டீசலில் விலை ரூ. 400ஆகவும் உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை அமைச்சரவையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 77, டீசல் ரூ. 111 உயர்த்தப்பட்டதன் மூலம் பெட்ரோல் ரூ. 450-க்கும், டீசல் ரூ. 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இன்று அதிகாலை 3 மணிமுதல் புதிய விலையானது அமலுக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.