முகப்பு
உலகம்

ஆப்கன்: மூன்று குண்டுவெடிப்புகளில் 9 பேர் பலி, 15 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாண தலைநகா் மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற நான்கு குண்டுவெடிப்புகளில், 9 போ் பலியானதாகவு

Updated On : 26 மே, 2022 at 3:50 PM
பகிர்:

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாண தலைநகா் மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 போ் பலியானதாகவும், 15 போ் காயமடைந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் 3 வாகனங்களையும் ஒரு மசூதி பகுதிகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் வாழும் ஷியா சிறுபான்மையின ஹஸாரா இனக்குழுவை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் மசூதி அருகிலும் மத வழிபாட்டு பள்ளியிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 33 ஷியா முஸ்லிம்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.