உலகம்

தெற்கு சீனாவில் கனமழைக்கு 15 பேர் பலி; 3 பேர் மாயம்

தெற்கு சீனாவில் பெய்து வரும் கனமழைக்கு குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேரை காணவில்லை என்று அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

DIN


பெய்ஜிங்: தெற்கு சீனாவில் பெய்து வரும் கனமழைக்கு குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேரை காணவில்லை என்று அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சீனாவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள புஜியான் மாகாணத்தில் நிலச்சரிவு காரணமாக இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும், தென்மேற்கு சீனாவில் சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யுனான் மாகாணத்தில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் மூன்று பேரை காணவில்லை.

குவாங்சி பகுதியில் உள்ள ஜின்செங் நாட்டில் வெள்ளிக்கிழமை மூன்று குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும்,  2 பேர் இறந்தனர், ஒருவர் உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியட்நாமின் எல்லைக்கு வடக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யுனானின் கியூபே கவுண்டியில் ஏற்பட்ட புயலால் சாலைகள், பாலங்கள் மற்றும் தொலைத்தொடர்பு, மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. 

மேலும், புஜியன் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்த தொழிற்சாலை கட்டடத்தில் சிக்கி ஐந்து பேர் பலியானதாகவும், மேலும், மூன்று பேர் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டடத்தில் சிக்கிக்கொண்டாதாக சின்ஹுவா தெரிவித்துள்ளது.

துறைமுக நகரான ஜியாமெனில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வூபிங் கவுண்டியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை தொடங்கியது.

இந்த புயல் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் உள்ளூரில் 39 வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகவும், 1,600க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

கல்லூரி கூட்டத்தில் மோதல்: திமுக மாநில நிா்வாகி காயம்

அம்பை வட்டாரத்தில் நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு திரளான பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT