கோப்புப் படம் 
உலகம்

பேருந்து மரத்தில் மோதி வங்கதேசத்தில் 10 பேர் பலி

வங்கதேசத்தின் பாரிசால் மாவட்டத்தில் இன்று (மே 29) பயணிகள் பேருந்து மரத்தில் மோதியதில் 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

DIN

வங்கதேசத்தின் பாரிசால் மாவட்டத்தில் இன்று (மே 29) பயணிகள் பேருந்து மரத்தில் மோதியதில் 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  

இந்த விபத்தானது அதிகாலையில் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு பாரிசாலில் உள்ள வாசிர்பூர் உபசிலா பகுதியை பேருந்து கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

  இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் ஷேர் -இ-பங்களா மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வாசிர்பூர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக் கூடும் என வங்கதேசத்தின் ”டெய்லி ஸ்டார் “ என்ற செய்தித்தாள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்கள் யார் என இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT