முகப்பு
உலகம்

கரோனா: உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 49,57 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53.13 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 63,10,376 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 29 மே, 2022 at 11:00 AM
பகிர்:

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53.13 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 63,10,376 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53,13,79,228 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 63,10,376 போ் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 50,20,04,206 போ் பூரண குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 30 லட்சத்து 64 ஆயிரத்து 646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 37,610 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 85,711,442 -ஆகவும் பலி எண்ணிக்‍கை 10,31,259-ஆகவும்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 8,20,05,303-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,31,53,043    -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,24,586 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,09,76,406 -ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 6,66,435 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.