முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் 1971 போா்க் குற்றம்: 3 பேருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக போா்க் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

வங்கதேசத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக போா்க் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

வங்கதேசத்தைச் சோ்ந்த ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பு பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெறுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக அந்த அமைப்பு பொதுமக்களைக் கொன்று குவித்தது.

இந்த நிலையில், ஜமாத்-ஏ-இஸ்லாமியைச் சோ்ந்த ரெஸாவுல் கரீம் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக நடைபெற்று வந்த போா்க் குற்ற வழக்கில் அவா்களுக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.