முகப்பு
உலகம்

88வது முறையாக திருமணம் முடித்த காதல் மன்னன்: மணப்பெண் முன்னாள் மனைவியாம்

இந்தோனேசியாவின் காதல் மன்னன் என்று அறியப்படும் 61 வயது நபர், 88வது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:43 AM
88வது முறையாக திருமணம் முடித்த காதல் மன்னன்
பகிர்:


இந்தோனேசியாவின் காதல் மன்னன் என்று அறியப்படும் 61 வயது நபர், 88வது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிளேபாய் கிங் என்று அந்நாட்டு மக்களால் அழைக்கப்படும் கான், 888வது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கும் மணப்பெண் அவரது முன்னாள் மனைவி என்று கூறப்படுகிறது.

மேற்கு ஜாவா பகுதியைச் சேர்ந்தவர் கான். தன்னை விட்டுப் பிரிந்துச் சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரும் போது ஏற்க முடியாது என்று கூற முடியவில்லை. நாங்கள் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தாலும் எங்களுக்குள் காதல் போகவில்லை என்கிறார் சிரித்தபடி.

தற்போது திருமணம் முடித்தப் பெண்ணை, கான் ஏற்கனவே 86வது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்கள் ஒரு மாத காலமே வாழ்ந்த நிலையில் மனக்கசப்பினால் பிரிந்து விட்டனராம்.

கான் 14வது வயதில் முதல் திருமணம் செய்துள்ளார். அப்போது அவரது மனைவி அவரை விட 2 வயது மூத்தவராம். ஆனால் எனது மோசமான நடவடிக்கையால், திருமணமான 2 ஆண்டுகளில் எனது மனைவி என்னை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு என்னை விரும்பும் பெண்களை திருமணம் செய்து கொள்வேன் என்கிறார்.

கானுக்கு இதுவரை நடந்த 87 திருமணங்கள் மூலம் எத்தனைக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவரவில்லை.
 

முழு கட்டுரையைப் படிக்க →