உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை 

DIN

வடகொரியா சனிக்கிழமை 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

வடகொரியா சமீபத்திய வருடங்களில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரே நாளில் 23 ஏவுகணைகளை அந்நாடு சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில் இந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாகவே சனிக்கிழமை மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

காலை 11.39 மணியளவில் குறுகிய தூரம் சென்று தாக்கும் வகையிலான 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. 

தென்கொரியா - அமெரிக்கா இணைந்து மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை எதிர்த்து வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT