உலகம்

அமெரிக்காவின் டெக்சாஸில் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சாகச நிகழ்ச்சியில் போது இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

DIN

அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சாகச நிகழ்ச்சியில் போது இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களில்  ஆறு பேர் இருந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

போயிங் பி-17  மற்றும் பெல் பி-63 கிங்கோப்ரா விமானங்கள், விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது,  இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் தரையில் விழுந்து நொறுங்கியது. பின்னர் தீப்பிடித்து, வானில் கரும்புகை தோன்றியது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டெல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் ட்விட்டரில்  "விடியோ பதிவுகள் இதயத்தை உடைக்கிறது. விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு படையினர் ஆதரவுடன் விபத்துக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பி-17, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க வான் சக்தியின் ஒரு மூலக்கல்லாக இருந்தது. கிங்கோப்ரா என்ற அமெரிக்க போர் விமானம், போரின் போது சோவியத் படைகளால் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.  இந்த வகை விமானங்கள் பெரும்பாலும் அருங்காட்சியகங்கள் மற்றும் விமானக் காட்சிகளில் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT