உலகம்

சீனாவில் உச்சமடையும் கரோனா: புதிதாக 32,943 பேருக்கு தொற்று!

DIN

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,943 பேருக்கு தொற்று கரோனா உறுதி செய்யபட்டுள்ளது. 

சீனாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையொட்டி அங்கு கரோனா பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

புதன்கிழமை நாடு முழுவதும் 31,444 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.புதிதாகி 32,943 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. 

இதில் 3,103 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. 29,840 பேருக்கு எந்தவித கரோனா அறிகுறிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புகள் எதுவும் இல்லை. 

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து அந்த நாட்டில் அதிகபட்சமாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

சீனாவில் தொடங்கிய கரோனா, தற்போது பாதிப்பு அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT