உலகம்

உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷிய டிரோன்கள் தாக்குதல்; கிழக்குப் பகுதியில் கடும் போர்

DIN

உக்ரைனின் தலைநகர் கீவ் ரயில் நிலையத்துக்கு அருகே, அதுவும் காலையில் அதிகம் பேர் பயணிக்கும் நேரத்தில் ரஷிய டிரோன்கள் நடத்திய தொடர் தாக்குதலில் பல இடங்களில் தீப்பற்றி எறிந்தது, பல குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன.

டிரோன்களின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உடனடியாக எந்த தகவலும் இல்லை. ஒரு வாரத்துக்கு முன்பு, இதேப்போன்று கீவ் நகரில் காலை வேளையில் ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்திய நிலையில், இன்று அதேப்போன்று டிரோன்கள் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கீப் நகரின் பல இடங்கள் தீப்பற்றி எறிந்ததாகவும், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் தலைநகா் பிராந்தியத்திலுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்த நிலையம் பலத்த சேதமடைந்தது.

முன்னதாக கடந்த வாரத்தில் மின் நிலையங்களைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வந்ததால், மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதற்கான அபாயம் ஏற்பட்டது; எனவே, கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் உக்ரைன் அதிபா் அலுவலக துணை தலைமை அதிகாரி கிரிலோ டைமோஷென்கோ வலியுறுத்தியிருந்தார்.

போர் எதற்கு?

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தின் கணிசமான பகுதிகளை ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

எனினும் அதனைப் பொருள்படுத்தாத ரஷியா, கிரீமியாவுக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்காக ரயில் பாதை மற்றும் சாலை இணைந்த பாலத்தை கட்டியது.

சுமாா் 19 கி.மீ. நீளமுடைய அந்தப் பாலத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்துவைத்தாா்.

இந்த நிலையில், ரஷியா - கிரீமியா பாலத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் அந்தப் பாலம் சேதமடைந்தது. இதில் 3 போ் உயிரிழந்ததாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் ரஷியா கடந்த வாரத்தில் தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் பலியாகி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT