இலங்கை திரும்பிய கோத்தபயவுக்கு அரசு மாளிகை, முழு பாதுகாப்பு 
உலகம்

இலங்கை திரும்பிய கோத்தபயவுக்கு அரசு மாளிகை, முழு பாதுகாப்பு

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அரசு மாளிகை வழங்கப்பட்டு, முழு நேரப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, தாய்லாந்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினாா். அவருக்கு அரசு மாளிகை வழங்கப்பட்டு, முழு நேரப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று மக்கள் போராட்டம் வலுத்ததையடுத்து, அவா் கடந்த ஜூலை 13-ஆம் தேதி நாட்டிலிருந்து வெளியேறி மாலத்தீவு சென்றாா். அங்கிருந்து சிங்கப்பூா் சென்ற அவா், பின்னா் தாய்லாந்து சென்று அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தாா்.

நாட்டை விட்டுத் தப்பியோடி சரியாக 51 நாள்களுக்குப் பின் இலங்கை திரும்பியிருக்கும் கோத்தபயவுக்கு, கொழும்புவில் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச வசிக்கும் மாளிகைக்கு அருகே உள்ள அரசு மாளிகை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.  அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அவா் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அதிபா் ரணில் விக்ரமசிங்க செய்திருந்தார். இந்நிலையில், கோத்தபய ராஜபட்ச தாய்லாந்திலிருந்து சிங்கப்பூா் வழியாக வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு வந்தடைந்தாா். அவரை இலங்கையின் அமைச்சர்கள் பலரும் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT