உலகம்

அணு ஆயுதத்தைப் பயன்படுத்த சட்டம் இயற்றிய வடகொரியா

DIN

போர் அச்சுறுத்தல் சூழலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும் சட்டத்தை வடகொரியா நிறைவேற்றியுள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா நாடானது அவ்வப்போது மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனை கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வடகொரியா மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. 

இந்நிலையில் போர் அச்சுறுத்தல் சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சட்டத்தை வடகொரியா நிறைவேற்றியுள்ளது. திரும்பப் பெற முடியாத வகையில் நிறைவேற்றபட்டுள்ள இந்த சட்டத்தால் உலக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டத்தால் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக பேசியுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எந்த உரிமையையும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT