கோப்புப்படம் 
உலகம்

ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இன்று (செப்டம்பர் 16) சந்தித்துள்ளனர்.

DIN

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இன்று (செப்டம்பர் 16) சந்தித்துள்ளனர்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்த இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போருக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் முதல் முறையாக சந்திக்கின்றனர். ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதன்பின்னர் இந்த சந்திப்பு நிகழ்வதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக நிகழ்வுகள் குறித்துப் பேசியதாக தெரிகிறது. 

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை இதுவரை இந்தியா விமர்சமனம் எதுவும் செய்யவில்லை. இருப்பினும், இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவா் கைது

சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT