முகப்பு
உலகம்

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம்! பிறப்பு விகிதத்தை அதிகரிக்கத் திட்டம்

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக ரூ.48 ஆயிரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 13 டிசம்பர், 2022 at 4:16 PM
பகிர்:

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக ரூ.48 ஆயிரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ஏற்கெனவே இந்திய ரூபாய் மதிப்பில், 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை ஜப்பான் அரசு வழங்கி வருகிறது. 

ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. தென்கொரியாவைப் போன்று ஜப்பானிலும் குழந்தைப் பெற்றுக்கொள்வதில் அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இதனால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 

Advertisement

அந்தவகையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக ரூ. 42,000 வழங்க அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத் துறை முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே குழந்தை பிறந்த பிறகு, தம்பதிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,52,000 (4,20,000 யென்) வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் 2023ஆம் நிதியாண்டு முதல் அமல்படுத்தவும் ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.

ஜப்பானில் பொருளாதார பற்றாக்குறை, உறுதித்தன்மையற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக்கொள்வதில் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.