ஜோ பைடன் (கோப்புப் படம்) 
உலகம்

அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் ஜோ பைடன்

2024ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

DIN


2024ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

பைடனுடன் அணி சேர்ந்து மீண்டும் போட்டியிடவுள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டுடன் அதிபர் பதவிக்கான காலம் முடிவடைகிறது. இதனால், அடுத்த ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தனது சுட்டுரைப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். 

ஜனநாயக கட்சியின் உள்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார். 

அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ஜோ பைடனும் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT