உலகம்

இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை!

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

மேலும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இம்ரான் கானின் எம்.பி. பதவியும் பறிக்கப்படுகிறது. 

பிரதமராக இருந்தபோது பதவியை தவறாகப் பயன்படுத்தி ரூ. 14 கோடி ஊழல் செய்ததாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.  இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ரூ. 1 லட்சத்தை கட்டத்தவறினால், மேலும் 6 மாதங்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையனோடையில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்பபு

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

கயத்தாறில் கிணற்றில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

குமரி மாவட்டத்தில் ஜூன் 8இல் மக்கள் நீதிமன்றம்

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

SCROLL FOR NEXT