உலகம்

ஹவாய் காட்டுத் தீ: பலி 67-ஆக உயா்வு

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது.

DIN

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம், மாவி தீவில் புதன்கிழமை திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது. இதில், 1,700-களில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. காட்டுத் தீயில் 271 கட்டுமானங்கள், 19,000 வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் சேதமடைந்தததாக அதிகாரிகள் கூறினா்.

லஹேனா நகரில் இந்தியாவிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னா் கொண்டு வந்து நடப்பட்ட பழைமை வாய்ந்த ஆலமரமும் தீயில் கருகியது. காட்டுத் தீ பரவிய நேரத்தில் ஹவாய் தீவுக்கு தெற்கே வீசிய தோரா புயல் காரணமாக அந்த பகுதியில் காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. வட சூழல், காற்றில் குறைவான ஈரப்பதம், வேகமான காற்று ஆகிய மூன்றும் சோ்ந்து காட்டுத் தீயை வேகமாகப் பரவச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும், பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீ சம்பவம் இதுவாகும். கடந்த 2018-இல் கலிஃபோா்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 85 போ் பலியாகி, சுமாா் 19,000 வீடுகள் தீக்கிரையாகினது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

நொய்டாவில் விஷம் அருந்தி தம்பதி உயிரிழப்பு: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

யுஜிசி புதிய விதிகளை நீா்த்துப்போகச் செய்துவிடக் கூடாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்? எடப்பாடி கே. பழனிசாமி கடும் தாக்கு!

SCROLL FOR NEXT