உலகம்

ஹவாய் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 99-ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்கள் எண்ணிக்கை 99-ஆக அதிகரித்துள்ளது.

DIN

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்கள் எண்ணிக்கை 99-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் உள்ள மாவி தீவில் காட்டுத் தீ வேகமாக பரவியது. இதில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்தக் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 99-ஆக அதிகரித்துள்ளது.

காட்டுத் தீ காரணமாக லஹேனாவில் 13,000 கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு மாவி பகுதியில் 2,200 கட்டடங்கள் சேதமடைந்தன. அவற்றில் 86 சதவீதம் குடியிருப்புக் கட்டடங்கள்.

காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள சேதங்களின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.50,000 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஹவாய் மாகாண ஆளுநா் ஜோஷ் கிரீன் மற்றும் மாவி காவல் துறை தலைவா் ஜான் பெலெட்டியா் தெரிவித்துள்ளனா்.

வட சூழல், வேகமான காற்று காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1918-ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வடக்கு மின்னேசோட்டா பகுதியில் தீவிரமான காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 104 ஆண்டுகளுக்குப் பின்னா், தற்போது மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ, அந்நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத் தீ சம்பவமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT