முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: தானிய சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் நாசம்

பாகிஸ்தானில் பட்டோகி தானிய சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து நாசமானது.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
கோப்புப் படம்.
பகிர்:

பாகிஸ்தானில் பட்டோகி தானிய சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து நாசமானது. 
பாகிஸ்தானில் பட்டோகியின் தானிய சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தையில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனே தீவிபத்து குறித்து அப்பகுதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தகவலின் பேரில் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு விரைந்த போதிலும் அதன் நீர் வேகமாக வெளியேறியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கூடுதல் தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 
இருப்பினும் அப்பகுதி குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஆறு தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் 50 கடைகள் எரிந்து முற்றிலும் நாசமானது. 

முழு கட்டுரையைப் படிக்க →