ஃபுகுஷிமா அணு மின் நிலையம் 
உலகம்

அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24-ல் கடலில் வெளியேற்றும் ஜப்பான்!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை வியாழக்கிழமை கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

DIN

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை வியாழக்கிழமை கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன.

அதையடுத்து, ஜப்பானிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அந்த விபத்துக்குப் பிறகு அணு உலைகளிலிருந்து கதிரியக்க நீா் வெளியேறியது. அதனை பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனா்.

தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்த நிலையில், ஜப்பான் சென்று அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறினா்.

எனினும், ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலப்பதற்கு சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை ஜப்பானில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கதிரியக்க நீரை வியாழக்கிழமை கடலில் வெளியேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த நீரைக் கடலில் கலந்தால், ஜப்பானின் கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்போவதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசுகள் அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் - நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு; பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களின் நிலை?: கனிமொழி கேள்வி

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

உ.பி.யில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது: யோகி சர்ச்சைப் பேச்சு

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலில் சிம்லாவுக்கு முதலிடம்!

SCROLL FOR NEXT