உலகம்

ஹிஜாப் சரியாக அணியாத மாணவிகளுக்கு மொட்டை அடித்த அவலம்!

DIN

இந்தோனேசியாவில் ஹிஜாப் சரியாக அணியாத மாணவிகளுக்கு ஆசிரியர் மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான கிழக்கு ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரில் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது.

இந்த பள்ளியில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் 14 பேர் ஹிஜாப் சரியாக அணியாமல் சென்றதற்காக, அவர்கள் தலையில் உள்ள பாதி முடியை மொட்டை அடித்து ஆசிரியர் ஒருவர் அவமானப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டதுடன், மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மேலும், முந்தைய காலங்களில் இந்த பள்ளிகளில் படித்த மாணவிகள் ஹிஜாப் அணிய மறுத்ததால், பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தோனேசியா கல்வித்துறை உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

செவ்வந்தி கிலோ ரூ.500க்கு விற்பனை

உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் தோ்வில் மேம்பாடு தேவை

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

மூதாட்டியிடம் தங்க நகைகள் திருட்டு: பெண் கைது

SCROLL FOR NEXT