உலகம்

ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்: ரஷிய அதிபர்

DIN

ரஷிய நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களும் எட்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் வலியுறுத்தியுள்ளார்.

மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக ரஷிய மக்கள் சபையில் உரையாற்றும் போது புதின் இவ்வாறு தெரிவித்தார். 

ரஷியாவின் பிறப்பு விகிதம் 1990-இல் இருந்து குறைந்துகொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. 

இந்த நிலையில், ரஷியாவின் மக்கள் தொகையை அதிகரிப்பது "வரவிருக்கும் பத்தாண்டுகளுக்கு எங்கள் இலக்கு" என்று  புதின் தெரிவித்தார்.

மக்கள் தொகை குறைந்துவருவதால் ஏற்படும் பிரச்னைகளை ரஷியா சந்தித்து வருவதாகவும், இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் விளாதிமீா் புதின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT