இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

ஹமாஸ் தலைவரைப் பிடிக்கப்போவது உறுதி! : இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் அமைப்பின் தலைவரைப் பிடிக்கப்போவது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

DIN

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாரைப் பிடிக்கப்போவது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கடந்த  புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் தலைவர் இருப்பதாக நம்பப்படும் காஸாவின் தெற்குப்பகுதிகளைச் சுற்றி இஸ்ரேலின் படை வளைத்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.  தற்போது அவர்கள் சின்வாரின் வீட்டைச் சுற்றி வளைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், 'அங்கிருந்து அவர் எளிதாகத் தப்பி ஓடிவிடுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் விரைவில் அவரைப் பிடிக்கப்போவது உறுதி' எனத் தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில், செஞ்சிலுவை அமைப்பினரிடம் காஸாவில் இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்து தருமாறும் கோரியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT