டெய்லர் ஸ்விஃப்ட்| AP 
உலகம்

டைம்ஸ் நாளிதழின் ‘இந்த ஆண்டின் சிறந்த நபர்’ இவர்தான்!

டைம்ஸ் நாளிதழ் ஆண்டுக்கு ஒருமுறை இந்த விருதை அறிவித்து வருகிறது.

DIN

டைம்ஸ் நாளிதழ் ஆண்டு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அந்தாண்டுக்கான சிறந்த நபர் என்கிற பெயரை அறிவிக்கும்.

2023-ம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர், அமெரிக்க பாப் இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட். 

இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “டெய்லரின் சாதனைகள்- கலாச்சார, விமர்சன மற்றும் வணிகரீதியாக - திரண்டு நிற்கிறது. அவற்றைப் பட்டியலிடுவது இயலாத காரியம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

2023-ல் பல சமயங்களில் நாளிதழ்களில் தலைப்பு செய்தியில் அடிபடும் பெயராக டெய்லர் ஸ்விஃப்ட் இருந்துள்ளார். அக்டோபரில் வெளியான அவரது இசை நிகழ்ச்சிகள் திரைப்படம் ‘எராஸ் டூர்’ உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

டைம்ஸ் நாளிதழ், கடந்த ஆண்டு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியை அந்தாண்டுக்கான நபராகத் தேர்வு செய்தது. 2021-ல் எலான் மஸ்க் தேர்வு செய்யப்பட்டார்.

நபர்களுக்கு மட்டுமில்லாமல் குழு அல்லது பொருள் அல்லது கருத்துருக்களுக்கும், டைம்ஸின் அந்தாண்டுக்கான நபராக அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

SCROLL FOR NEXT