உலகம்

அணுகுண்டால் சிதைந்த ஜப்பானில் ஓப்பன்ஹெய்மர்!

DIN

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் ஜப்பானைத் தவிர உலகின் அனைத்து இடங்களிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

ஐமேக்ஸ் திரையரங்குகள் இந்த படத்தை எடுக்க விரும்பாததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. அந்த நேரத்தில் வெளியான 'பார்பி' திரைப்படத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டது. 

ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜப்பானில் நடந்த அணுகுண்டு தாக்குதலை சிறுமைப் படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் படம் திரையிடப்படாததற்குக் காரணமாகக் கருதப்பட்டன. பேச்சுவார்த்தைகள் எதுவும் நல்ல முடிவைத் தராத நிலையில் ஜப்பானைத் தவிர எல்லா இடங்களிலும் ஓப்பன்ஹெய்மர் வெளியானது. 

கிறிஸ்டோபர் நோலன் இரண்டாம் உலகப்போரில் நடந்த முதல் அணுகுண்டு தாக்குதலில் ஜப்பான் மக்கள் பட்ட இன்னல்களை மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்தன.   

இந்த நிலையில் ஓப்பன்ஹெய்மர் அடுத்த ஆண்டு ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகும் எனத் திரைப்படத்தின் வெளியீட்டாளர் பிட்டர்ஸ் என்ட் தெரிவித்துள்ளார்.  'அணுகுண்டு தயாரிப்பில் ஓப்பன்ஹெய்மருக்கு இருந்த முக்கிய பங்கின் மீதான தார்மீகக் குழப்பத்தை மையமாக வைத்த இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜப்பானில் வெளியாகும்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

மக்களவை தேர்தல் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் (விடியோ)

ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

இந்தோனேசியாவில் தோண்டத் தோண்ட கிடைக்கும் உடல்கள்..!

SCROLL FOR NEXT