முகப்பு
உலகம்

பாதுகாப்பான இடமாக அறிவித்த பகுதிகளில் தாக்குதல்! நெறி மீறுகிறதா இஸ்ரேல்?

காஸாவின் தெற்குப்பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் எனத் தெரிவித்த இஸ்ரேல் அங்கும் தாக்குதல் நடத்தியுள்ளது. 

Updated On : 10 டிசம்பர், 2023 at 3:06 PM
இஸ்ரேலின் தாக்குதலால் புகைமண்டலாமாக மாறியுள்ள காஸா | AP
பகிர்:

காஸாவின் மீது நடந்துவரும் தொடர் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில், பாதுகாப்பான இடம் என பாலஸ்தீன மக்களை இடம்பெயரச்சொல்லிய தெற்குப்பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுவரை 17,700க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் இராணுவம் கொன்றுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 70 சதவிகிதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் இராணுவத்தின் தலைவர் ஹர்சி ஹலேவி, 'தீவிரவாதிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது, அவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சமீபமாக பல தீவிரவாதிகள் சரணடைவதைப் பார்க்கிறோம். இதன் மூலம் ஹமாஸ் அமைப்பின் அழிவு நெருங்கிவிட்டதை புரிந்துகொள்ள முடிகிறது' எனக் கூறியுள்ளார்.  

Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இந்தப் போரில் பொதுமக்களை பாதுகாப்பாக தெற்குப்பகுதிகளுக்கு இடம் பெயருமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இப்போது அந்த இடங்களிலும் தாக்குதல் நடத்திவருகிறது. 

பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்களிலும் தாக்குதல்கள் நடத்திவரும் இஸ்ரேல், ஹமாஸ் போராளிகள் அங்கு ஒழிந்திருப்பதாகக் காரணம் கூறிவருகிறது. ஹமாஸ் அமைப்பை அழிக்காமல் போரை நிறுத்தப்போவதில்லை என உறுதிகொண்டுள்ளது.

போரை உடனடியாக நிறுத்துவது தொடர்பான ஐநாவின் தீர்மானத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.