ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபைசாபாத்தில் இன்று (டிச.11) காலை 8.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை.
இதையும் படிக்க | தூத்துக்குடியில் அதிகரிக்கும் ஜாதியப் பதற்றம்! ஊரை காலி செய்யும் தலித் குடும்பங்கள்!
முன்னதாக, கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21-ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வறுமை மிகுந்து காணப்படும் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் ஆப்கானிஸ்தான் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.