உலகம்

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 3-வது நாளாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2-ஆகப் பதிவு

DIN

ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று (டிச.11) காலை 7.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை.

முன்னதாக, கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21-ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) 4.8 ரிக்டர் அளவிலும், நேற்று (திங்கள்கிழமை) 4.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து இன்றும் (டிசம்பர் 12) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வறுமை மிகுந்து காணப்படும் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் ஆப்கானிஸ்தான் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT