உஸ்மான் கவாஜா பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் | AP 
உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: கருப்புப் பட்டை அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் கருப்புநிற கைப்பட்டையை அணிந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

DIN


ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா, கருப்புநிற கைப்பட்டையை அணிந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பலியான பொதுமக்களின் இழப்பைச் சுட்டிக் காட்டும் வகையில் “அனைத்து உயிர்களும் சமம்” என அச்சிடப்பட்ட காலணியை அணிந்திருந்தார். 

இதனை பன்னாட்டு கிரிக்கெட் வாரியம் தலையிட்டு, அரசியல் மற்றும் மதரீதியான விஷயங்களை விளையாட்டு வீரர்கள் தங்களின் உடையிலோ கிரிக்கெட் பொருள்களிலோ பயன்படுத்தக் கூடாது என்கிற விதியைக் குறிப்பிட்டு தடை செய்தனர்.

கவாஜா, வாரியத்தின் விதிகளைக் கடைபிடிப்பதாகவும் இருந்தபோதும் இந்தக் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்திருந்திருப்பதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடர் விளையாடும் முதல் இஸ்லாமியர். காஸாவில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தனது ஆதரவை தெரிவிக்கும் முகமாகக் கருப்பு பட்டையை அணிந்து தொடரின் முதல் நாள் போட்டியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்.

36 வயதான கவாஜாவுக்கு அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆதரவை வெளிப்படுத்தினார். “அவரது காலணியில் இருந்த வாசகமான அனைத்து உயிர்களும் சமம் என்பதை நான் ஆதரிக்கிறேன். அது பிளவுப்படுத்தும் நோக்கில் அல்ல. இது குறித்து யாருக்கும் புகார் இருக்க நியாயமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT