உலகம்

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14, டீசல் லிட்டருக்கு ரூ.13.5-ஆக குறைப்பு

பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீடு டீசல் விலையை அடுத்த பதினைந்து நாட்களுக்கு குறைத்துள்ளது.

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீடு டீசல் விலையை அடுத்த பதினைந்து நாட்களுக்கு குறைத்துள்ளது.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் அரசு உயர்த்தியது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த சூழலில், சர்வதேச சந்தையில் எரிப்பொருள்களின் விலைகள் கடந்த இரண்டு நாள்களில் கிட்டத்தட்ட ஐந்து சதவிகிதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சிறிதளவு உயர்ந்துள்ளது, இதன் விளைவாக நுகர்வோரின் உள்நாட்டு விலைகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் எரிப்பொருள்களின் விலைகள் அடுத்த பதினைந்து நாள்களுக்கு(டிச. 15) முதல் குறையும் என தகவலறிந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீடு டீசல் விலையை அடுத்த பதினைந்து நாட்களுக்கு குறைத்து உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து பாகிஸ்தான் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14 குறைக்கப்பட்டு ரூ.267.34-க்கும், ஹை-ஸ்பீடு டீசல் விலை லிட்டருக்கு ரூ.13.5 குறைக்கப்பட்டு ரூ.276.21-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10.14 குறைக்கப்பட்டு ரூ.191.02-க்கும், லைட்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.29 குறைக்கப்பட்டு ரூ.164.64-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT