சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்துபோன கட்டிடம் 
உலகம்

சீன நிலநடுக்கம், குழம்பிப்போன விஞ்ஞானிகள்!

நிலநடுக்கம் ஏற்படப்போவதை 3 நாள்களுக்கு முன்னதாகவே சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

DIN

கடந்த திங்கள் கிழமை சீனாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 நாள்களுக்கு முன்னதாகவே அச்சுறுத்தும் சமிக்ஞைகளைப் பெற்றதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஏற்படப்போகும் நிலநடுக்கம் சீனாவில் எந்த இடத்தைத் தாக்கப் போகிறது என்பதில் பெரும் குழப்பமடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தில் 131 பேர் இறந்துள்ளனர். 700க்கும் அதிகமான மக்கள் காயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பயங்கரமான நிலநடுக்கமாகக் கருதப்படும் இது, சீனாவில் கான்சு மற்றும் கின்காய் ஆகிய பகுதிகளைத் தாக்கியது. 

பொதுவாகவே ஏற்படப்போகும் நிலநடுக்கங்களை முன்கூட்டிய கண்டுபிடிப்பதென்பது முடியாத காரியமாகவே கருதப்பட்டு வந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் அந்தப் பணியில் சிறந்தவர்களாக விளங்கினார்கள். 

சீனாவின் ஷான்க்ஷி மாகாணத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 7.0 ரிக்டர் அல்லது அதற்கு அதிகமான அளவிலான நிலநடுக்கங்களை அவை வருவதற்கு முன்னரே தங்களால் கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவ்வளவு பெரிய நிலநடுக்கங்கள் எந்தப் பகுதியைத் தாக்கப்போகின்றன எனக் கண்டுபிடிப்பது சிரமமான விசயம் எனக் கூறியுள்ளனர். 

புவியீர்ப்பு புலத்தின் அதிர்வெண்களில் ஏற்படும் சீரற்ற மாற்றத்தை கடந்த வெள்ளிக்கிழமையே கவனித்ததாகவும், நிலநடுக்கம் ஏற்படப்போவதை ஊகித்ததாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சீனாவின் எல்லைக்குள் அது நடக்கப்போவதை ஊகிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் காயம்

குடிமைப் பணித் தோ்வுக்கு தயாராகி வந்த இளம்பெண் தற்கொலை

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வீட்டில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது

மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவா் கைது

SCROLL FOR NEXT