உலகம்

காணாமல் போன இந்திய மாணவி: தகவல் தருபவருக்கு சன்மானம்!

DIN

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சன்மானம் அறிவித்துள்ளது அந்நாட்டில் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.

29 வயதான இந்திய மாணவி மயூசி பகத், ஜெர்ஸி நகரத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார். அவர் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஏப்ரல் 29, 2019 அன்று மாலை வெளியேறியவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் மே 1, 2019 காவல்துறைக்குப் புகார் அளித்தனர்.

அமெரிக்க உளவு அமைப்பின் நெவார்க் அலுவலகம் மற்றும் ஜெர்ஸி நகர காவல் துறை பகத் காணாமல் போன வழக்கில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

மாணவியின் இருப்பிடம் மற்றும் அவர் குறித்து தகவல்கள் தருபவருக்கு அமெரிக்க டாலர்கள் 10 ஆயிரம் வரை சன்மானம் அளிக்கப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நியூயார்க் தொழில்நுட்பக் கழகத்தில் படித்து வந்த மயூசி, 1994 ஜுலையில் பிறந்தவர். காணாமல் போன இரவு அன்று, கருப்பு நிற டீ-சர்ட்டும் வண்ணமயமான பைஜாமாவும் அணிந்திருந்தார்.

ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகள் அவருக்குத் தெரியுமெனவும் தெற்கு பிளைன்பீல்ட் பகுதியில் அவரின் நண்பர்கள் வசித்ததாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: எக்ஸ் தளம் முடங்கியது!

2016-ல் அமெரிக்காவுக்கு மாணவ நுழைவுச்சீட்டில் மயூசி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊரக வளா்ச்சித் துறையில் 6 பேருக்கு பணி ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

பிரதமரும் ஒடிஸா முதல்வரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ்

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

மருந்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT