மத்திய ஐரோப்பாவின் பிராக்கில் (Prague) உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். செக் குடியரசில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு இது எனக் கூறப்படுகிறது.
சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறைக் கட்டிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மாணவன் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் எந்த தீவிரவாத நோக்கத்துடனும் அமைப்புடனும் தொடர்புடையது இல்லை என செக் உள்துறை அமைச்சர் விட் ரகுசான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 20 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
சம்பவம் நடந்த இடத்தில் வெடிபொருள்கள் ஏதேனும் உள்ளதா எனக்காவல்துறையினர் ஆய்வு நடத்திவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அந்த கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.