மான்செஸ்டர் பகுதியில் சேதமடைந்த வீட்டின் மேற்கூரை | AP 
உலகம்

இங்கிலாந்தில் புயல், சூறாவளி!

இங்கிலாந்தில் புயல் காரணமாக வடக்குப் பகுதி, ஸ்காட்லாந்து கடும் சிக்கலைச் சந்தித்து வருகிறது.

DIN

லண்டன்: வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவு உடன் கெரீட் புயல் தாக்கி வருகிறது. வீடுகள் சேதமடைந்துள்ளன. ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசுவதாகவும் வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க முயற்சித்து வருவதாகவும் உள்ளூர் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மரமொன்று விழுந்து ரயிலின் ஓட்டுநர் கேபினை தகர்த்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சாலைகளில் பனி மூட்டம் இருப்பதாகவும் சிறியளவிலான சூறாவளி வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு 100-க்கும் அதிகமான வீடுகளில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் முதன்மையான ஹீத்ரூ விமான நிலையம், வானிலை சீரற்ற நிலை காரணமாக 18 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டால்: பில் கேட்ஸ் சொல்லும் பதில்!

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது

பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு. வெங்கடேசன்

வாழ்க்கை வரலாற்று இலக்கியம்

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

SCROLL FOR NEXT