காஸா தெற்குப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் விடும் உறவினர்கள் | AP 
உலகம்

இனப்படுகொலை செய்கிறது இஸ்ரேல்!: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு!

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

DIN

இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தைச் செய்துவருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையே நடைபெற்றுவரும் இந்தப் போரின் நோக்கம் காஸாவிலுள்ள பாலஸ்தீன மக்களை அழிப்பதுதான் எனத் தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 

காஸாவில் இஸ்ரேல் பல போர் குற்றங்களை நிகழ்த்துவதாக பல்வேறு தரப்புகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், இந்த வழக்கை தென்னாப்ரிக்கா தொடர்ந்துள்ளது. பொதுமக்களைப் பாதுகாக்குமாறு அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்திவந்த நிலையில், காஸாவில் இதுவரை 21,500-க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொன்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் அப்பாவி பாலஸ்தீனர்கள் மட்டுமல்லாமல், ஹமாஸ் அமைப்பால் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். 

சொந்த நாட்டு மக்களை தவறுதலாகக் கொன்றபோதும் போரை நிறுத்தாமல் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்ஜேடியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு!

ஐசிஐசிஐ வங்கியின் 3வது காலாண்டு வருவாய் சரிவு!

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்!

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி; 10 ஓவர்களில் நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

ஆசியாவின் மிக உயரமான கட்டடத்தில் ஏறி சாதனை!

SCROLL FOR NEXT